இயல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இயல்1இயல்2இயல்3

இயல்1

வினைச்சொல்

 • 1

  (இயல, இயன்றது, இயன்றால், இயலாத, இயலாமல் முதலிய சில வடிவங்கள் மட்டும்) [உ.வ.] (ஒருவரால் ஒன்றைச் செய்ய) முடிதல்.

  ‘இந்த வயதிலும் கச்சேரிசெய்து தன்னால் இயன்றதைச் சம்பாதித்து வருகிறார்’
  ‘நிதி திரட்ட அவர்களால் இயலலாம், இயலாமலும் போகலாம்’
  ‘தவிர்க்க இயலாத சில காரணங்களால் அவர் விழாவுக்கு வரவில்லை’

இயல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இயல்1இயல்2இயல்3

இயல்2

பெயர்ச்சொல்

 • 1

  (மரபு இலக்கணப்படி தமிழ்மொழியில் வழங்கும் மூன்று துறைகளில்) செய்யுளையும் உரைநடையையும் குறிப்பது.

இயல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இயல்1இயல்2இயல்3

இயல்3

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நூலின் உட்பிரிவு; அதிகாரம்.

  ‘இந்த ஆய்வு நூல் நான்கு பெரும் பிரிவுகளாகவும் பத்து இயல்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது’