தமிழ் இயல்பு யின் அர்த்தம்

இயல்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவர் இப்படிப்பட்டவர் அல்லது ஒன்று இப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும்) பண்பு; தன்மை.

  ‘தனிமனித இயல்புகள் எளிதாக மாறக்கூடியவை அல்ல’
  ‘நினைத்ததை நிறைவேற்றாமல் விடுவது அவருடைய இயல்பு அன்று’
  ‘கவிதையின் இயல்புகுறித்து விளக்க முற்பட்டார்’

 • 2

  இயற்கையாகக் காணப்படுவது அல்லது நிகழ்வது; தானாக நிகழ்வது.

  ‘உன் வெற்றியைக் கண்டு பிறர் பொறாமைப்படுவது இயல்பு’
  ‘நெருப்பில் நீர் ஊற்றினால் அணைவது இயல்புதானே’
  ‘ஆண் பெண்ணிடையே காதல் தோன்றுவது இயல்பான ஒன்றுதான்’

 • 3

  (-ஆக, -ஆன) (அவரவர்க்கு அல்லது அததற்கு) உரிய முறை; சீர்.

  ‘அவர் பேச்சும் சிரிப்பும் இயல்பாக இல்லை’
  ‘காலில் வீக்கம் குறைந்து விட்டது என்றாலும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை’