தமிழ் இரங்கு யின் அர்த்தம்

இரங்கு

வினைச்சொல்இரங்க, இரங்கி

 • 1

  (பிற உயிர்களின் துன்பம் கண்டு) வருந்துதல்.

  ‘அந்தக் குழந்தையின் நிலைமைக்கு மிகவும் இரங்கினேன்’

 • 2

  (மனம்) இளகுதல்.

  ‘விபத்தில் அவர் மகன் இறந்ததைக் கேட்டு அவருக்காக ஊரார் இரங்கினார்கள்’
  ‘தாயே! மனம் இரங்கி எங்களுக்கு வழிகாட்டு!’