தமிழ் இரட்டிப்பு யின் அர்த்தம்

இரட்டிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) இரண்டு மடங்கு.

  ‘எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு வசூல் நடந்தது’
  ‘மகனுக்கு வேலை கிடைத்தது, மகளுக்குத் திருமணம்; அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!’

 • 2

  (முன்பு செய்யப்பட்டது) மீண்டும் ஒரு முறை செய்யப்படுவது.

  ‘அவன் செய்ததையே திரும்பவும் நீ செய்கிறாய்; இரட்டிப்பு வேலையால்தான் நேரமே வீணாகிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு பயிர் செய்வதற்கான நிலத்தில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது உழவு.