தமிழ் இரட்டை யின் அர்த்தம்
இரட்டை
பெயர்ச்சொல்
- 1
ஒரே மாதிரியான அல்லது ஒரே வகையான பொருள்களில் இரண்டு, ஒன்றாகப் பொருந்தியிருப்பது.
‘இரட்டைப் பழம்’ - 2
ஒரே மாதிரியான இரண்டு இணையாக இருப்பது; ஜோடி.
‘இரட்டைப் பின்னல்’‘இரட்டை நாயனம்’‘இரட்டை மாட்டு வண்டி’ - 3
இரண்டு.
‘இரட்டைச் சம்பளம்’‘இந்திய வீரர் அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார்’ - 4
(‘மடித்தல்’ என்னும் வினையோடு வரும்போது) இரண்டு.
‘வேட்டியை இரட்டையாக மடித்துக் காயப் போடு’ - 5
இரட்டிப்பு.
‘இரட்டை வேலை செய்ய வேண்டாம்’