தமிழ் இரட்டை வேடம் யின் அர்த்தம்

இரட்டை வேடம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு திரைப்படத்தில் ஒரே நடிகர் இரண்டு விதமான வேடங்களை ஏற்று நடித்தல்.

  ‘இவர் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார்’

 • 2

  எதிரெதிரான இரண்டு தரப்புகளுக்கும் அல்லது நிலைகளுக்கும் சார்பாக நடந்துகொள்வது போலக் காட்டிக்கொள்ளும் தன்மை.

  ‘தொழிற்சங்கத் தலைவர் இரட்டை வேடம் போடுகிறாரோ என்ற சந்தேகம் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது’
  ‘அவருடைய இரட்டை வேடத்தைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்திவிட்டன’