தமிழ் இரண்டுபடு யின் அர்த்தம்

இரண்டுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (பகைமையால் குடும்பம், ஊர் முதலானவை) இரு கட்சிகளாகப் பிரிதல்.

  ‘தேர்தல் வந்து ஊரே இரண்டுபட்டது’
  ‘சிறு பிரச்சினையை உடனடியாகக் கவனிக்காமல்விட்டதால் குடும்பம் இரண்டுபட்டுக்கிடக்கிறது’

 • 2

  (ஓர் இடம்) ஆரவாரத்தோடு காணப்படுதல்; அமர்க்களப்படுதல்.

  ‘பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்றால் சிறுவர்களால் தோப்பே இரண்டுபடும்’
  ‘பெரிய நடிகர்கள் வந்ததால் கல்யாண வீடு இரண்டுபட்டது’