இரு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இரு1இரு2இரு3

இரு1

வினைச்சொல்

  • 1

    (நிலைமையைக் குறித்தல் தொடர்பான வழக்கு)

    1. 1.1 (ஒருவர் அல்லது ஒரு பொருள், ஓர் இடம், பரப்பு, சூழல் போன்றவற்றில் குறிப்பிட்ட நிலையில்) காணப்படுதல்; அமைதல்

      ‘உன் அப்பா வீட்டில் இருக்கிறாரா?’
      ‘நீ தாத்தாவோடு இருந்தது தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம்’
      ‘பிற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன’
      ‘தமிழில் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்’
      ‘கோவிலுக்கு எதிரில் நிறைய பூக் கடைகள் இருக்கின்றன’
      ‘ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்’
      ‘புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்?’
      ‘அவனுடைய கன்னத்தில் நிறைய தழும்புகள் இருந்தன’
      ‘அவருடைய நகைச்சுவைகளில் துளிகூட ஆபாசம் இருக்காது’
      ‘இமயமலை இந்தியாவில் இருக்கிறது’
      ‘வானில் நிலவு இருக்கிறது’
      ‘என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?’
      ‘நீர் கலங்கலாக இருந்தது’
      ‘வீட்டில் ஜாக்கிரதையாய் இரு!’
      ‘நாம் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம்’
      ‘இந்தச் சேலை புதிதாக இருக்கிறதே!’
      ‘அந்த மூட்டை கனமாக இருந்ததால் என்னால் தூக்க முடியவில்லை’
      ‘குழந்தை அதன் அம்மாவின் சாயலில் இருந்தது’

  • 2

    (நிலைத்தலைக் குறித்தல் தொடர்பான வழக்கு)

    1. 2.1 (குறிப்பிடப்படும் இடத்தில் ஒருவர்) தங்குதல்; வசித்தல்

      ‘அவர் பத்து வருடங்களாக மயிலாப்பூரில் இருக்கிறார்’
      ‘நீ கிராமத்துக்குப் போய் ஒரு வாரம் இருந்துவிட்டு வா’
      ‘நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் இருக்கிறார்கள்’

    2. 2.2 (ஓர் இருக்கையில், இடத்தில்) உட்கார்தல்

      ‘அவர் நாற்காலியைக் காட்டி ‘இருங்கள்’ என்று சொன்னார்.’
      ‘அவர் ஊஞ்சலில் இருந்துகொண்டே பேசினார்’
      ‘அவரை உள்ளே வந்து இருக்கச் சொல்’

    3. 2.3 காத்திருத்தல்

      ‘சற்று நேரம் இருந்து அவரைப் பார்த்துவிட்டு வா!’
      ‘கொஞ்சம் இருங்கள், நானும் வந்துவிடுகிறேன்’

    4. 2.4 (நினைவில், கவனத்தில்) தங்குதல் அல்லது பதிதல்

      ‘அவனை நான் முதலில் சந்தித்த அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது’
      ‘என்னை ஞாபகம் இருக்கிறதா?’
      ‘இந்த விஷயம் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்’

  • 3

    (உடைமையைக் குறித்த வழக்கு)

    1. 3.1 (நான்காம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றுமை உருபு இணைந்த பெயர்ச்சொல்லுடன் வரும்போது) (ஒரு தன்மை, பொருள் போன்றவற்றை) உடையதாக அமைதல்; கொண்டிருத்தல்; வைத்திருத்தல்

      ‘அவருக்கு ஒரு வீடு இருக்கிறது’
      ‘குழந்தைக்கு இன்னும் காய்ச்சல் இருக்கிறது’
      ‘எனக்குக் குடும்பம் இருக்கிறது; அதுதான் எனக்கு முக்கியம்’
      ‘எனக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் நான்தான் நிச்சயம் வெற்றி பெறுவேன்’
      ‘எனக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள்’
      ‘அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம்’
      ‘அவளுக்கு நிறைய வேலைகள் இருந்ததால் அவனுடன் கடைக்கு வர முடியாது என்று கூறிவிட்டாள்’
      ‘எனக்கு இருக்கும் ஒரே பிரச்சினை நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதுதான்’
      ‘அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையே எதிர்த்துப் பேசுவான்?’

    2. 3.2 (ஒன்று நிகழ்வதற்கு) குறிப்பிட்ட அளவு நேரம் எஞ்சுதல்

      ‘ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது’
      ‘அமாவாசைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?’

  • 4

    (பிற வழக்கு)

    1. 4.1 (குறிப்பிட்ட எண்ணம், உணர்ச்சி போன்றவை) ஏற்படுதல்; தோன்றுதல்

      ‘அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று இருக்காதா?’
      ‘தன்னுடைய கஷ்டத்தை நண்பர்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்களா என்று அவளுக்கு இருந்தது’
      ‘ஏன் இங்கு வந்தோம் என்று இருக்கிறது’

    2. 4.2 (விரதம்) கடைப்பிடித்தல்; (பட்டினி) கிடத்தல்

      ‘காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி அவர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்’
      ‘என்னால் இருபத்துநாலு மணி நேரம் பட்டினி இருக்க முடியாது’
      ‘வாரம் ஒரு நாள் மௌன விரதம் இருப்பது அவர் வழக்கம்’

    3. 4.3 ஒன்று நிகழும் அல்லது ஒன்றைச் செய்யும் நிலையில் அமைதல்

      ‘நாங்கள் சட்டங்களை மீறுவதாக இருக்கிறோம் என்றார் காந்திஜி’
      ‘புது நாடகம் போடுவதாக இருந்தோம்’
      ‘நாங்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறோம்’

இரு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இரு1இரு2இரு3

இரு2

துணை வினை

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிய அனுமானத்தையோ ஊகத்தையோ தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.

    ‘விழா முடிந்திருக்கும்’
    ‘நான் வீட்டுக்குப் போவதற்குள் குழந்தை தூங்கியிருக்கும்’
    ‘நாளை இந்நேரம் அவர் அமெரிக்கா போயிருப்பார்’
    ‘நான் மட்டும் ஜாக்கிரதையாக இருந்திருக்காவிட்டால், விபத்தில் இறந்திருப்பேன்’

  • 2

    வினைச்சொல் குறிப்பிடும் செயலின் விளைவாக ஒன்று காணப்படும் நிலையைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை.

    ‘உன்னுடைய சட்டை கிழிந்திருக்கிறது’
    ‘கல் பட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது’
    ‘கதவு நன்றாகத் திறந்திருந்தது’
    ‘திருகாணி கழன்று கீழே விழுந்திருந்தது’

  • 3

    ஒருவர் ஒன்றை உறுதியாக அல்லது நிச்சயமாகத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.

    ‘எங்களுக்கு இந்த வீடு பிடித்திருக்கிறது’
    ‘குழந்தைக்கு மருந்து கொடுத்திருக்கிறேன்’
    ‘உன்னைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள்’
    ‘தேர்வுக்கு உள்ள பாடத்தை நன்றாகப் படித்திருக்கிறாயா?’

  • 4

    (இறந்தகால வடிவங்கள் மட்டும்) ஒரு செயலைத் தொடர்ந்து மற்றொரு செயல் நிகழப்போவதுபோல் இருந்து பின் நிகழாததைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.

    ‘கல் தடுக்கிக் கீழே விழ இருந்தேன்’
    ‘அவனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற இருந்தேன்’
    ‘கீழே விழுந்து கண்ணாடி உடைய இருந்தது’

இரு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இரு1இரு2இரு3

இரு3

பெயரடை

  • 1

    ‘இரண்டு’ என்பதன் பெயரடை வடிவம்.