தமிழ் இருக்கட்டும் யின் அர்த்தம்

இருக்கட்டும்

வினைச்சொல்

  • 1

    பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை விட்டுவிட்டு வேறொரு விஷயத்தைக் குறித்துப் பேசப்போகும்போது பயன்படுத்தும் சொல்.

    ‘நாங்கள் திருமணத்துக்கு வருவது இருக்கட்டும்; உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’
    ‘‘நீங்கள் நாளை ஊருக்குப் போகிறீர்களா?’ ‘அது இருக்கட்டும்; நீ எப்படித் தேர்வு எழுதினாய்?’’