தமிழ் இருக்கப்பட்ட யின் அர்த்தம்

இருக்கப்பட்ட

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சொத்து, செல்வாக்கு முதலியவை உள்ள.

    ‘அது இருக்கப்பட்ட குடும்பம். அங்கே போய்ப் பெண்ணெடுப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது’
    ‘இல்லாதவர்களுக்கு இருக்கப்பட்டவர்கள்தானே உதவ வேண்டும்?’
    ‘உனக்கு என்ன கவலை, நீ இருக்கப்பட்டவன். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வாய்’