தமிழ் இருக்கை யின் அர்த்தம்

இருக்கை

பெயர்ச்சொல்

 • 1

  உட்காருவதற்கு என்று செய்யப்பட்ட (நாற்காலி, பெஞ்சு போன்ற) அமைப்பு.

  ‘அரங்கத்தில் மேடைக்கும் பார்வையாளர்களின் இருக்கைகளுக்கும் இடையில் கணிசமான இடைவெளி இருக்க வேண்டும்’
  ‘அவன் தன் இருக்கையில் அமரப்போன நேரத்தில் மேலதிகாரி அழைத்தார்’

 • 2

  (பல்கலைக்கழகங்களில்) ஒரு துறையில் குறிப்பிட்ட உயர்நிலை ஆய்வுக்கு என்று நிதி ஒதுக்கி உருவாக்கப்படும் இடம் அல்லது பொறுப்பு.

  ‘பெர்க்லி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் இருக்கை’
  ‘சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கை நிறுவப்பட்டுள்ளது’