தமிழ் இருட்டடிப்பு யின் அர்த்தம்

இருட்டடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு செய்தி, நிகழ்ச்சி அல்லது ஒருவருடைய சாதனை போன்றவற்றைப் பிறர் அறியாதபடி வேண்டுமென்றே மறைக்கும் செயல்.

    ‘எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையை வானொலி நிலையம் ஒலிபரப்பவில்லை. ஏன் இந்த இருட்டடிப்பு?’

  • 2

    (போர்க் காலத்தில்) இரவில் கட்டடங்களிலிருந்து வரும் வெளிச்சத்தை (கறுப்புக் காகிதம் போன்றவற்றைக் கொண்டு) அடைக்கும் செயல்.

    ‘இரண்டாம் உலகப்போரின்போது ஊரடங்குச் சட்டம், இருட்டடிப்பு என்று நாடே அல்லோலகல்லோலப்பட்டது’