தமிழ் இருத்து யின் அர்த்தம்

இருத்து

வினைச்சொல்இருத்த, இருத்தி

 • 1

  உட்காரச் செய்தல்.

  ‘குழந்தையை மடியில் இருத்தித் தலையைத் தடவினாள்’

 • 2

  (மனத்தில்) அழுந்தச்செய்தல்; பதித்தல்.

  ‘நீங்கள் சொன்னதை மனத்தில் இருத்திக்கொண்டேன்’

 • 3

  கீழ்நோக்கி அழுத்துதல்.

  ‘தோளைப் பிடித்து இருத்தி உட்காரவைத்தார்’

 • 4

  (ஒருவரை) தாமதிக்கச் செய்தல்; நிறுத்திவைத்தல்.

  ‘நான் வரும்வரை அவரை அங்கேயே இருத்திவை!’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை ஓர் இடத்தில்) தங்கவைத்தல்.

  ‘ஊரை விட்டுச் செல்வதனால் எங்கள் வீட்டில் அவர்களைத்தான் இருத்தப்போகின்றோம்’