தமிழ் இருந்தபோதிலும் யின் அர்த்தம்

இருந்தபோதிலும்

இடைச்சொல்

  • 1

    முதல் வாக்கியம் ஒரு நிலையை விவரிக்க, அதற்கு மாறான விளைவை இரண்டாவது வாக்கியம் தெரிவிக்கும்போது இரண்டு வாக்கியங்களையும் தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ‘எனினும்’; ‘இருந்தாலும்’.

    ‘தீர்மானத்துக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தபோதிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’
    ‘வாழ்க்கையில் சிக்கல் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை’