தமிழ் இருந்தாற்போல் யின் அர்த்தம்

இருந்தாற்போல்

(இருந்தாற்போல்இருந்து)

வினையடை

  • 1

    (கொஞ்சமும்) எதிர்பார்க்காதபோது; திடீரென்று.

    ‘தெரிந்தவர் மூலம் வேலைவாங்கித் தருகிறேன் என்று சொன்னவர், இருந்தாற்போல் இருந்து பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்’
    ‘இருந்தாற்போல் இருந்து வீட்டைக் காலி செய் என்றால் நாங்கள் என்ன செய்வது?’
    ‘நன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர், இருந்தாற்போல இருந்து அழ ஆரம்பித்து விட்டார்’