தமிழ் இருப்பு யின் அர்த்தம்

இருப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நோக்கத்தோடு) சேமித்து வைத்திருக்கும் பொருள்.

  ‘புழுங்கலரிசி இருப்பு குறைந்துவருகிறது’
  ‘வெளிநாட்டுச் செலாவணி இருப்பு போதிய அளவுக்கு உண்டு’

 • 2

  (ஒருவர் அல்லது ஒன்று ஓர் இடத்தில்) இருத்தல்.

  ‘இருட்டாக இருந்தாலும் அவன் குரலே அவனுடைய இருப்பைக் காட்டிவிட்டது’

 • 3

  (ஒருவர் இருக்கும்) நிலை.

  ‘ஒரு காலத்தில் அவர் இருந்த இருப்பு என்ன?’
  ‘நான் இருக்கும் இருப்பில் வேறு என்ன செய்ய முடியும்?’

 • 4

  சோதிடம்
  ஒருவர் பிறந்த நேரத்துக்கு உரிய தசையில், பிறந்த நேரம்வரை கழிந்தது போக மீதியிருக்கும் காலம்.

  ‘ராகு தசையில் இருப்பு போக பாக்கி 3 வருடம் 8 மாதம்’