தமிழ் இருப்புக்கொள் யின் அர்த்தம்

இருப்புக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) நிதானத்துடனும் படபடப்பின்றியும் இருத்தல்.

    ‘பள்ளிக்குச் சென்றவன் மணி ஏழாகியும் திரும்பாததால் இருப்புக்கொள்ளாமல் தவித்தாள்’
    ‘பேரன் வரப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் எனக்கு இருப்புக்கொள்ளவில்லை’