தமிழ் இருள் யின் அர்த்தம்

இருள்

வினைச்சொல்இருள, இருண்டு

 • 1

  (வெளிச்சம் குறைந்து) இருட்டு பரவுதல்.

  ‘வானம் இருண்டு மழை வரும் போலிருக்கிறது’
  உரு வழக்கு ‘மனைவி இறந்த பிறகு வாழ்க்கையே இருண்டு விட்டது’

 • 2

  (மயக்கத்தால் கண்) ஒளி குறைதல்; மங்குதல்.

  ‘காலையிலிருந்து சாப்பிடாததால் கண் இருண்டுகொண்டுவந்தது’

தமிழ் இருள் யின் அர்த்தம்

இருள்

பெயர்ச்சொல்

 • 1

  (வெளிச்சம் குறைவதால் அல்லது இல்லாததால் ஏற்படும்) ஒளி இன்மை.

  ‘ஜன்னல்களே இல்லாத அந்த அறைக்குள் ஒரே இருள்’
  ‘பகலிலும் இருள் சூழ்ந்த காடு’