தமிழ் இரு கரம் நீட்டி யின் அர்த்தம்

இரு கரம் நீட்டி

வினையடை

  • 1

    (வரவேற்கும் விதமாக) மிகுந்த விருப்பத்தோடு.

    ‘படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அத்தனை குழந்தைகளையும் இந்தப் பள்ளி இரு கரம் நீட்டி வரவேற்கிறது என்றார் பள்ளி முதல்வர்’
    ‘சமூக சேவை செய்ய விரும்பும் தன்னார்வலர்களை இந்த அனாதை ஆசிரமம் இரு கரம் நீட்டி வரவேற்கிறது’