இரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இரை1இரை2இரை3இரை4

இரை1

வினைச்சொல்இரைய, இரைந்து, இரைக்க, இரைத்து

 • 1

  உரத்த குரலில் பேசுதல்.

  ‘ஏன் இப்படி இரைந்து பேசுகிறாய்?’

 • 2

  உரத்த குரலில் திட்டுதல்.

  ‘நான் படிக்காமல் ஊர்சுற்றுவதாக அப்பா இரைந்தார்’
  ‘அனுமதி பெற்றுத்தான் உள்ளே வர வேண்டும் என்று காவல்காரன் இரைந்தான்’

 • 3

  (வயிறு) சத்தமிடுதல்.

  ‘அஜீரணமா என்று தெரியவில்லை, வயிறு இரைகிறது’

 • 4

  உரத்த ஓசை எழுப்புதல்.

  ‘கூட்டில் அடையும் முன் பறவைகள் இரைந்துகொண்டேயிருந்தன’

இரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இரை1இரை2இரை3இரை4

இரை2

வினைச்சொல்இரைய, இரைந்து, இரைக்க, இரைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கண்கள், முகம் போன்றவை) வீங்குதல்.

  ‘இரவு முழுதும் கண்விழித்ததால் கண்கள் இரண்டும் இரைந்துகிடக்கிறது’
  ‘தூக்கம் இல்லாததால் முகம் இரைந்துபோய்விட்டது’

இரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இரை1இரை2இரை3இரை4

இரை3

வினைச்சொல்இரைய, இரைந்து, இரைக்க, இரைத்து

 • 1

  (இயல்பை விட) வேகமாக சுவாசித்தல்; மூச்சுவாங்குதல்.

  ‘வீட்டுக்குள் இரைக்க இரைக்க ஓடி வந்தவனைப் பார்த்ததும் அம்மா பயந்துவிட்டாள்’

 • 2

  (ஆஸ்துமா போன்ற நோயால்) சீரான சுவாசம் தடைபட்டுச் சிரமத்துடன் மூச்சுவிடுதல்; மூச்சுத் திணறுதல்.

  ‘தூசு பட்டாலே அப்பாவுக்கு இரைக்க ஆரம்பித்துவிடும்’

இரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இரை1இரை2இரை3இரை4

இரை4

பெயர்ச்சொல்

 • 1

  விலங்குகள் அல்லது பறவைகளால் கொன்று தின்னப்படும் பிற உயிரினங்கள்.

  ‘மலைப்பாம்பின் வயிறு புடைத்திருப்பதைப் பார்த்தால் சற்று முன்தான் இரையை விழுங்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது’
  ‘பெண் பறவையைக் குஞ்சுகளுக்குப் பாதுகாப்பாகக் கூட்டில் விட்டுவிட்டு ஆண் பறவை இரை தேடுவதற்கு வெளியில் செல்லும்’