தமிழ் இரைச்சல் யின் அர்த்தம்

இரைச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதர்கள், இயந்திரங்கள், இயற்கைச் சக்திகள் போன்றவை எழுப்பும்) கலவையான, தெளிவற்ற பெரும் சத்தம்.

  ‘கல்யாண வீட்டின் இரைச்சலில் அருகில் இருப்பவர் பேசுவதுகூடக் காதில் விழவில்லை’
  ‘அலைகடலின் ஓயாத இரைச்சல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது’
  ‘ராட்டினங்களின் இரைச்சல், சிறுவர்களின் கூச்சல், வியாபாரிகளின் கூவல் இவையெல்லாம் கலந்து அந்த இடம் மிக ரம்மியமாகத் தோன்றியது’

 • 2

  பெரும் குரலில் வரும் திட்டு.

  ‘தாமதமாக வந்த மகனைப் பார்த்து அவர் இரைச்சல்போட்டார்’

 • 3

  (வயிற்றுக்குள், காதுக்குள்) ரீங்காரம் போன்றோ எதாவது உருள்வது போன்றோ கேட்கும் ஓசை.

  ‘இரண்டு நாளாக வயிறு சரியில்லை, ஒரே இரைச்சல்’