தமிழ் இரையாகு யின் அர்த்தம்

இரையாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (குறிப்பிட்ட ஒன்றுக்கு) பலியாதல்/(நோய், மோசமான நிலை முதலியவற்றுக்கு) உள்ளாதல்.

    ‘சாதிச் சண்டையில் பல குடிசைகள் தீக்கு இரையாகிவிட்டன’
    ‘பயிர்கள் எல்லாம் வெள்ளத்துக்கு இரையாகிவிட்டதே!’
    ‘ஒரு காமுகனுடைய ஆசைக்கு இரையாகி அந்தப் பெண்ணின் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது’