தமிழ் இறக்குமதி யின் அர்த்தம்

இறக்குமதி

பெயர்ச்சொல்

  • 1

    (வெளிநாட்டிலிருந்து பொருள்களை) பெறும் அல்லது வரவழைக்கும் நடவடிக்கை; இந்த முறையில் வரவழைக்கப்பட்ட பொருள்.

    ‘பெட்ரோலுக்கு நாம் இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டியுள்ளது’
    ‘சமையல் எண்ணெய் இறக்குமதி இந்த வருடம் குறைந்திருக்கிறது’
    உரு வழக்கு ‘மும்பையிலிருந்து இறக்குமதியான நடிகை இவர்’