தமிழ் இறக்கை யின் அர்த்தம்

இறக்கை

பெயர்ச்சொல்

 • 1

  பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும், பறப்பதற்கு உதவும் உறுப்பு; சிறகு.

 • 2

  (சில பறவைகளின்) இறகு.

  ‘தோட்டத்தில் கோழி இறக்கைகள் சிதறிக் கிடந்தன’

 • 3

  விமானத்தின் பக்கவாட்டில் இரு புறமும் நீண்டிருக்கும் பகுதி.

 • 4

  (மின்விசிறி போன்றவற்றில் பொருத்தப்பட்டிருக்கும்) நீள் வடிவ உலோகத் தகடு.

  ‘நான்கு இறக்கைகள் உடைய மின்விசிறி’
  ‘தமிழ்நாட்டில் காற்றாலை இறக்கை செய்யும் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட உள்ளது’