இறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறு1இறு2இறு3

இறு1

வினைச்சொல்இற்று என்னும் எச்ச வடிவம் மட்டும், இறுக்க, இறுத்து

 • 1

  (மரம், கம்பு போன்றவை) உளுத்துப் பொடிந்துவிடும் நிலையில் இருத்தல்/(கயிறு, தோல் போன்றவை) அறுந்துபோய்விடும் நிலையில் இருத்தல்.

  ‘மழையில் நனைந்துகிடந்ததால் கட்டைகள் இற்றுப்போயிருந்தன’
  ‘கயிறு இற்றுக்கொண்டே வருகிறது’
  உரு வழக்கு ‘அவளுக்கு நம்பிக்கை இற்றுப்போயிற்று’

இறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறு1இறு2இறு3

இறு2

வினைச்சொல்இற்று என்னும் எச்ச வடிவம் மட்டும், இறுக்க, இறுத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (விடை, பதில்) சொல்லுதல் அல்லது அளித்தல்.

  ‘கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவள் ஒரே வரியில் பதில் இறுத்தாள்’

இறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறு1இறு2இறு3

இறு3

வினைச்சொல்இற்று என்னும் எச்ச வடிவம் மட்டும், இறுக்க, இறுத்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல்.

  ‘புளியைக் கரைத்து இறுத்து ஊற்ற வேண்டும்’