தமிழ் இறுக்கு யின் அர்த்தம்

இறுக்கு

வினைச்சொல்இறுக்க, இறுக்கி

 • 1

  (நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் ஒன்றை அல்லது ஒருவரைப் பிடித்துப் பலமாக) அழுத்துதல்.

  ‘அவன் தப்பித்து ஓடிவிட முடியாதபடி பிடியை இறுக்கினார்’
  ‘திருடனைப் பிடித்துத் தூணோடு இறுக்கிக் கட்டினார்கள்’

 • 2

  (ஒரு பரப்பில் ஆணி, முளை போன்றவற்றை) நன்றாகப் பொருந்தும்படி திருகுதல் அல்லது அடித்தல்.

  ‘ஆணி அடிப்பதற்கு முன் துளையில் இந்தச் சிறிய கட்டையை வைத்து இறுக்கு’