தமிழ் இறுகு யின் அர்த்தம்

இறுகு

வினைச்சொல்இறுக, இறுகி

 • 1

  (நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்) அழுத்தமாக இருத்தல்.

  ‘கயிற்றின் முடிச்சு இறுகிப்போயிருந்தது’
  ‘அவருடைய பிடி இறுகிற்று’

 • 2

  (மென்மை அல்லது இளகிய தன்மை இழந்து) கடினத் தன்மை அடைதல்; கெட்டிப்படுதல்.

  ‘கடப்பாரையால் குத்த முடியாத அளவுக்குத் தரை இறுகியிருந்தது’
  ‘குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து இறுகிவிடும்’

 • 3

  (முகம்) இறுக்கமாகக் காணப்படுதல்.

  ‘அவன் முகம் கவலையால் இறுகியிருந்தது’