தமிழ் இறுதி யின் அர்த்தம்
இறுதி
பெயர்ச்சொல்
- 1
(தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு; கடைசி.
‘தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் இதை எழுதினார்’‘கச்சேரியில் இறுதிவரை யாரும் எழுந்திருக்கவில்லை’ - 2
மேலும் தொடராதது; கடைசி.
‘பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்’‘இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது’ - 3
மாற்ற முடியாதது; முடிவு.
‘வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு’‘இதுதான் உன் இறுதியான பதிலா?’‘இறுதியாக என்ன சொல்கிறாய்?’