தமிழ் இறுமாப்பு யின் அர்த்தம்

இறுமாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிறரைவிட உயர்வாகத் தன்னைப் பற்றி ஒருவர் கொள்ளும் உணர்வு; செருக்கு; கர்வம்.

    ‘அவருக்கு வசதி வந்துவிட்டதால் இறுமாப்போடு நடந்துகொள்கிறார்’

  • 2

    (மற்றவர்களைவிடத் தான் உயர்வு என்கிற) பெருமிதம்; கர்வம்.

    ‘வெள்ளம்போல் கவிதை பெருக்கெடுத்து வருகிறபோது கவிஞனுக்கு இறுமாப்பு வருகிறது’