இறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறை1இறை2இறை3இறை4இறை5

இறை1

வினைச்சொல்இறைந்து என்னும் எச்ச வடிவம் மட்டும், இறைக்க, இறைத்து

 • 1

  (பொருள்கள்) சிதறுதல்; அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்.

  ‘மூட்டை பிரிந்துவிட்டதால் வீடு முழுவதும் அரிசி இறைந்திருந்தது’
  ‘திருடன் வந்துவிட்டுப் போன மாதிரி வீட்டில் சாமான்கள் இறைந்து கிடந்தன’

இறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறை1இறை2இறை3இறை4இறை5

இறை2

வினைச்சொல்இறைந்து என்னும் எச்ச வடிவம் மட்டும், இறைக்க, இறைத்து

 • 1

  (தாறுமாறாக அள்ளி) வீசுதல்; சிதறச்செய்தல்.

  ‘காரில் இருந்தபடியே ஒருவர் துண்டுப் பிரசுரங்களை இறைத்துக்கொண்டு சென்றார்’
  ‘வேகமாக வந்த பேருந்து நடைபாதையில் நின்றிருந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டுச் சென்றது’
  உரு வழக்கு ‘கோபத்தில் வார்த்தைகளை இறைக்காதே’

 • 2

  (ஏதோ ஒன்றுக்காகப் பணத்தை) தேவைக்கும் அதிகமாகச் செலவுசெய்தல்.

  ‘பணத்தை இறைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஆகிவிட்டது!’

இறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறை1இறை2இறை3இறை4இறை5

இறை3

வினைச்சொல்இறைந்து என்னும் எச்ச வடிவம் மட்டும், இறைக்க, இறைத்து

 • 1

  (நீரை) வெளிக்கொண்டுவருதல்; வெளியேற்றுதல்.

  ‘காலையில் எழுந்ததும் கிணற்றிலிருந்து பத்துக் குடம் தண்ணீர் இறைப்பார்’
  ‘தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நிலக்கரிச் சுரங்கத்தில் புகுந்துவிட்ட நீரைப் பெரிய இயந்திரங்களால் இறைத்தார்கள்’

 • 2

  (வயலுக்கு நீர்) பாய்ச்சுதல்.

  ‘இன்னும் கிராமத்தில் கமலையால் வயலுக்கு நீர் இறைப்பதைப் பார்க்கலாம்’

இறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறை1இறை2இறை3இறை4இறை5

இறை4

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கடவுள்.

  ‘இறை வணக்கம்’
  ‘இறை வழிபாடு’

இறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இறை1இறை2இறை3இறை4இறை5

இறை5

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் பகுதி.

  ‘கைவிரல் இறையில் சிரங்கு வந்திருக்கிறது’
  ‘கால்விரல் இறை புண்ணாகக் கிடந்ததால் உப்புத் தண்ணீர் பட்டதும் எரிந்தது’