தமிழ் இல் யின் அர்த்தம்

இல்

வினைச்சொல்இல்லா, இல்லாத, இல்லாமல், இல்லை என்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  இன்மைப் பொருளைக் குறிப்பதற்கும், ‘உண்டு’ என்பதை மறுப்பதற்கும் பயன்படுத்தும், காலம் காட்டாத எதிர்மறை வினை.

தமிழ் இல் யின் அர்த்தம்

இல்

துணை வினைஇல்லா, இல்லாத, இல்லாமல், இல்லை என்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  ‘இரு’ என்னும் வினையின் இறந்தகால, நிகழ்கால வினைமுற்று வாக்கியங்களை மறுப்பதற்கு ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை அடுத்தும், ஒரு செயல், நிகழ்ச்சி போன்றவை வழக்கமாகவும் தொடர்ந்தும் நடைபெறவில்லை என்பதைக் குறிப்பிடுவதற்கு ‘-அது’ ஈற்றுத் தொழிற்பெயரை அடுத்தும் பயன்படுத்தும் துணை வினை.

  ‘நான் நேற்று சாப்பிடவில்லை’
  ‘அவர் இன்று மாலை ஊருக்குப் போகவில்லை’
  ‘அவர் திரைப்படம் பார்ப்பதில்லை’
  ‘என் நண்பன் மது அருந்துவதில்லை’