தமிழ் இலக்கு யின் அர்த்தம்

இலக்கு

பெயர்ச்சொல்

 • 1

  குறி.

  ‘இலக்கு நோக்கிப் பாயக்கூடிய ஏவுகணைகள்’

 • 2

  இயற்கை இன்னல்களின் அல்லது வன்முறைச் செயல்களின் பாதிப்புக்கு உட்படும் ஒருவர் அல்லது ஒன்று.

  ‘கடலோரத்தில் இருக்கும் ஊர்கள் புயலுக்கு இலக்காகின்றன’
  ‘குண்டுவீச்சின் இலக்குகள் ராணுவ முகாம்கள்’

 • 3

  குறிக்கோள்; இலட்சியம்.

  ‘எல்லாக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதுதான் மின் துறையின் இலக்கு’