தமிழ் இலகு யின் அர்த்தம்

இலகு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எளிது; சுலபம்.

  ‘எந்தக் கணக்காக இருந்தாலும் அவர் இலகுவாகப் போட்டுவிடுவார்’
  ‘இளைஞர்கள் புதுக்கவிதையை இலகுவான சாதனமாகக் கண்டனர்’
  ‘அவரது தலையங்கங்கள் இலகுவான நடையில் அமைந்திருந்தன’

 • 2

  கனமற்றது.

  ‘இலகுரகப் போர் விமானங்கள்’