தமிழ் இலக்கணம் யின் அர்த்தம்

இலக்கணம்

பெயர்ச்சொல்

 • 1

  மொழியின் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள்.

  ‘அவர் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவார், பேசுவார்’
  ‘தமிழின் முதல் இலக்கணம் தொல்காப்பியம்’

 • 2

  செய்யுளின் யாப்பு, பொருள் முதலியவற்றின் அடிப்படை/படைப்பிலக்கியத்தின் அமைப்பு முறை விளக்கம்.

  ‘வெண்பாவின் இலக்கணம்’
  ‘சிறுகதைக்கு இலக்கணம் கூற முடியுமா?’

 • 3

  வரையறுக்கும் தன்மை; முன்மாதிரி.

  ‘வீரத்தின் இலக்கணம் புறமுதுகிட்டு ஓடுவது அன்று’
  ‘இவர்கள் இருவரும் நட்புக்கு இலக்கணமாக விளங்குகிறார்கள்’