தமிழ் இல்லாததும் பொல்லாததும் யின் அர்த்தம்

இல்லாததும் பொல்லாததும்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த) உண்மையைத் திரித்தும், இட்டுக்கட்டியும் சொல்வது.

    ‘நான் அவனுக்குக் கடன் கொடுக்கவில்லை என்பதற்காக என்னைப் பற்றி முதலாளியிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்கிறான்’
    ‘அவருடைய நடவடிக்கைகள் உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவரைப் பற்றி இப்படி இல்லாததும் பொல்லாததும் பேசுவதா?’