தமிழ் இல்லாவிட்டால் யின் அர்த்தம்

இல்லாவிட்டால்

இடைச்சொல்

 • 1

  ‘(ஒன்று அல்லது ஒருவர்) இல்லை என்றால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவனுக்குக் காய்ச்சல் இல்லாவிட்டால் உன்னோடு கிளம்பியிருப்பான்’
  ‘அவள் இல்லாவிட்டால் ஒரு வேலையும் நடக்காது’

 • 2

  ‘அல்லது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் உன் வீட்டுக்கு வருகிறேன்’