தமிழ் இல்லை யின் அர்த்தம்

இல்லை

வினைச்சொல்

 • 1

  ‘இரு’ என்னும் வினையின் இறந்தகால, நிகழ்கால முற்று வடிவங்களின் (திணை, பால், எண், இட வேற்றுமை காட்டாத) எதிர்மறை வினைமுற்று.

  ‘நீ தேடுகிற புத்தகம் அலமாரியில் இல்லை’
  ‘குதிரைக்குக் கொம்பு இல்லை’

 • 2

  பெயர்ப் பயனிலை வாக்கியத்தை மறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் வினைமுற்று.

  ‘இது மாமரம் இல்லை’
  ‘அவன் என் நண்பன் இல்லை’
  ‘இது தென்னை மரம் இல்லை, பனை மரம்’

தமிழ் இல்லை யின் அர்த்தம்

இல்லை

இடைச்சொல்

 • 1

  ஒரு கேள்விக்கு எதிர்மறையில் பதிலாக வரும் வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘‘இது உன் வீடா?’ ‘இல்லை. இது என் பெற்றோர் வீடு.’’
  ‘‘அவர் நேற்று வந்தாரா?’ ‘இல்லை. அவர் இன்றுதான் வந்தார்.’’