தமிழ் இலை யின் அர்த்தம்

இலை

பெயர்ச்சொல்

 • 1

  தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவதும் (பெரும்பாலும்) மெல்லியதாகவும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்.

 • 2

  (குறிப்பாக) (உணவை வைத்துச் சாப்பிடப் பயன்படுத்தும்) வாழை இலை.

  ‘இது பெரிய இலை; மூன்றாக நறுக்கு’
  ‘எல்லாருக்கும் வரிசையாக இலைகளைப் போட்டு சாதத்தை அவள் பரிமாற ஆரம்பித்தாள்’

 • 3

  (மண்வெட்டி, களைவெட்டி போன்றவற்றில்) தட்டையாக இருக்கும் உலோகப் பரப்பு.

  ‘மண்வெட்டியின் இலை மழுங்கிவிட்டது’