தமிழ் இலைமறைவு காய்மறைவாக யின் அர்த்தம்

இலைமறைவு காய்மறைவாக

வினையடை

 • 1

  வெளியே தெரிந்தும் தெரியாமலும்.

  ‘இலைமறைவு காய்மறைவாக நடந்துகொண்டிருந்த பல விஷயங்கள் இப்போது வெளிப்படையாகவே நடக்கின்றன’
  ‘அந்த எழுத்தாளரின் கதைகளில் பாலுணர்வு இலைமறைவு காய்மறைவாக இருக்கும்’

 • 2

  (பேச்சு, செய்தி போன்றவற்றில்) மறைமுகமான குறிப்பு உடையதாக.

  ‘அப்பா இலைமறைவு காய்மறைவாகப் பேசியதிலிருந்து அவருக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது’
  ‘விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்துவிடாதே. இதில் இலைமறைவு காய்மறைவாக ஒரு விஷயம் இருக்கிறது’