தமிழ் இளக்கு யின் அர்த்தம்

இளக்கு

வினைச்சொல்இளக்க, இளக்கி

 • 1

  (கெட்டித் தன்மையிலிருந்து) நெகிழச்செய்தல்; இளகச் செய்தல்.

  ‘சாலை போடத் தாரை இளக்கி ஊற்றுகிறார்கள்’
  உரு வழக்கு ‘அவன் மனத்தை இளக்க முடியவில்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு தளர்த்துதல்.

  ‘கொடியைக் கொஞ்சம் இளக்கிக் கட்டு’
  உரு வழக்கு ‘பையனைக் கொஞ்சம் இளக்கிப் பிடி. அவன் திருந்துவான்’