தமிழ் இளகு யின் அர்த்தம்

இளகு

வினைச்சொல்இளக, இளகி

 • 1

  (தார், மெழுகு, வெல்லம் போன்றவை வெப்பத்தால்) கெட்டித் தன்மை இழத்தல்.

  ‘பத்து மணி வெயிலில் சாலையில் தார் இளகியிருக்கிறது. ஒரு மணி வெயிலில் உருகி ஓட ஆரம்பித்து விடும்’
  ‘சர்க்கரை இளகினால் இளம் பாகு பதமாக வரும்’
  உரு வழக்கு ‘மகளின் அழுகைதான் அவர் மனத்தைச் சற்று இளகவைத்தது’

 • 2

  (மலம்) வெளியேறும் வகையில் மிருதுவாதல்.

  ‘ஆமணக்கெண்ணெய் போன்றவை மலம் இளக உதவுகின்றன’
  ‘தொடர்ந்து ஏற்படும் இளகிய மலக் கழிவு நோயின் அறிகுறியாகும்’

 • 3

  (நிலம்) கெட்டியாக இல்லாமல் இருத்தல்.

  ‘கலப்பையைக் கொண்டு நிலத்தை இளகச் செய்ய வேண்டும்’
  ‘பூமியின் மேற்பரப்பு சில இடங்களில் இளகிக் காணப்படும்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (அப்பளம் முதலியவை) நமுத்தல்.

  ‘அப்பளம் இளகிவிட்டது’
  ‘முறுக்கை டப்பாவில் போடாததால் இளகிப்போய்விட்டது’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின் வீச்சு, தாக்கம் முதலியவை) வலுவிழந்து தணிதல்.

  ‘சாதிப் பிரச்சினை ஒருமாதிரி இளகிப்போய்விட்டது’