தமிழ் இளம் யின் அர்த்தம்

இளம்

பெயரடை

 • 1

  (மனிதர்களின் வயதைக் குறிப்பிடும்போது) இளமையான; (மிருகங்களில்) சிறுவயதுடைய.

  ‘இளம் பெண்’
  ‘இளம் வயது’
  ‘இளம் சிங்கம்’

 • 2

  (தாவரங்களைக் குறிப்பிடும்போது) வளரத் தொடங்கியுள்ள; முதிராத.

  ‘இளம் கொடி’

 • 3

  (ஒரு துறையில்) முன்னேறிவருகிற அல்லது ஆரம்ப நிலையில் இருக்கிற.

  ‘இளம் எழுத்தாளர்’
  ‘இளம் ஆட்டக்காரர்’

 • 4

  (நிறத்தைக் குறிப்பிடும்போது) வெளிர்.

  ‘இளம் சிவப்பு’
  ‘இளம் பச்சை’

 • 5

  (ஒன்றின் தன்மையைக் குறிப்பிடும்போது) மென்மையான; மிதமான.

  ‘இளம் தென்றல்’
  ‘இளம் வெயில்’
  ‘இளம் சூடு’

 • 6

  (குறிப்பிட்ட தன்மை, நிலை போன்றவற்றுக்கு முன் வரும்போது) அப்போதுதான் தொடங்கியுள்ள.

  ‘இளம் காலைப்பொழுது’
  ‘இளம் வழுக்கை’