இளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இளை1இளை2

இளை1

வினைச்சொல்இளைக்க, இளைத்து

 • 1

  (உடல்) மெலிதல்.

  ‘இளைத்துப் பாதி ஆகிவிட்டாயே!’
  ‘உடம்பு சற்று இளைக்க உண்ணாவிரதமா?’

 • 2

  (இறந்தகால வடிவங்களில் எதிர்மறையில்) மட்டமாக இருத்தல்; மதிப்பில் குறைதல்.

  ‘உன் குதிரையைவிட எந்த விதத்திலும் இளைத்தது அல்ல என் குதிரை’
  ‘நான் என்ன ஊருக்கு இளைத்தவனா?’

இளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இளை1இளை2

இளை2

வினைச்சொல்இளைக்க, இளைத்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு இரைத்தல்.

  ‘ஓடிவந்ததால்தான் உனக்கு இளைக்கிறது’