தமிழ் இளைப்பாறு யின் அர்த்தம்

இளைப்பாறு

வினைச்சொல்இளைப்பாற, இளைப் பாறி

 • 1

  (களைப்பைப் போக்க) ஓய்வெடுத்தல்.

  ‘கூலியாட்கள் சுமையை இறக்கிவைத்துவிட்டு இளைப்பாறத் தொடங்கினார்கள்’
  ‘சற்று நேரம் படுத்து இளைப்பாறினால்தான் மற்ற வேலைகளைச் செய்ய முடியும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (பணியிலிருந்து) ஓய்வுபெறுதல்.

  ‘இளைப்பாறிய பேராசிரியர்’