தமிழ் இளைய யின் அர்த்தம்

இளைய

பெயரடை

 • 1

  பின்னால் பிறந்த.

  ‘இளைய மகன்’
  ‘இளைய பெண்’

 • 2

  (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் ஒருவருக்கு இருக்கும்போது அவர்களில்) வயது குறைந்த.

  ‘இளைய தாரம்’
  ‘இளைய மனைவி’

 • 3

  வயது குறைந்த.

  ‘இளைய தலைமுறை’
  ‘என் பையன் தனக்கு இளைய குழந்தைகளோடுதான் விளையாடுகிறான்’

 • 4

  (மேற்கத்திய சமூகங்களில் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர் இருக்கும்போது) மகனின் பெயருக்கு அடையாக இடப்படும் சொல்.

  ‘இளைய போர்டு’
  ‘இளைய புஷ்’

 • 5

  (தலைமுறைதலைமுறையாகத் தொடரும் அதிகாரம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) அடுத்து அதிகாரத்துக்கு வரும் நிலையில் இருக்கும்.

  ‘இளைய ஜமீன்தார்’
  ‘இளைய நவாப்’
  ‘இளைய பண்ணையார்’