தமிழ் இழ யின் அர்த்தம்

இழ

வினைச்சொல்இழக்க, இழந்து

 • 1

  (இருப்பதை) பறிகொடுத்தல்.

  ‘துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்ததால் காலை இழந்தார்’
  ‘நாடு ஒரு பெரும் தலைவரை இழந்தது’

 • 2

  (வாய்ப்பு முதலியவற்றை) தவறவிடுதல்/(பதவி முதலியவற்றை) விட்டுவிடும்படியாதல்.

  ‘நீ அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டாய்’
  ‘அமைச்சரவை மாற்றத்தில் சிலர் பதவி இழந்தனர்’

 • 3

  (சுய நினைவு, நிம்மதி, பொறுமை முதலியவற்றை) போகவிடுதல்.

  ‘அவர் நினைவு இழந்து கீழே விழுந்தார்’
  ‘மானம் இழந்த பிறகு எப்படி வாழ்வது?’
  ‘இந்த ஊருக்கு வந்த பிறகு நிம்மதி இழந்துவிட்டேன்’