தமிழ் இழவு யின் அர்த்தம்

இழவு

பெயர்ச்சொல்

 • 1

  (குடும்பத்தில்) சாவு நேர்தல்.

  ‘இழவு வீடுகளுக்குச் சென்று விடைபெறுவோர் ‘போகிறேன்’ என்று மட்டுமே கூறுவார்கள்’

 • 2

  பேச்சு வழக்கு கசப்பான மனநிலையில் ஒருவர் தன் வெறுப்பு, எரிச்சல் முதலியவற்றை வெளிப்படுத்தும் சொல்.

  ‘என்ன இழவு, தினமும் வந்து தொல்லை கொடுக்கிறான்’
  ‘‘என்ன படிப்போ இழவோ, செலவுதான் மிச்சம்’’
  ‘காயம்பட்டதும் மருத்துவரிடம் போக வேண்டும் என்று தோன்றவில்லையா? இந்த இழவைக்கூடவா நான் சொல்லித் தர வேண்டும்?’