தமிழ் இழிவுபடுத்து யின் அர்த்தம்

இழிவுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரை) கேவலப்படுத்தும் அல்லது புண்படுத்தும் நோக்கத்தில் ஒரு செயலைச் செய்தல்.

    ‘குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்துவதுபோல் தலைவரின் பேச்சு அமைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்’
    ‘யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இதைக் கூறவில்லை’