தமிழ் இழுக்கப்பறிக்க யின் அர்த்தம்

இழுக்கப்பறிக்க

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பணம், பொருள் முதலியன) பற்றாக்குறை நிலையில்.

  ‘வாங்குகிற சம்பளம் இழுக்கப்பறிக்க இருப்பதால் ஒவ்வொரு செலவையும் யோசித்துத்தான் செய்ய வேண்டியிருக்கிறது’

 • 2

  பேச்சு வழக்கு எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்ற நிலையில்.

  ‘பெரியவரின் உடல்நிலை இழுக்கப்பறிக்க இருக்கிறது. ஒரு நாளைக்கு மேல் தாங்காது’
  ‘விபத்தில் அடிபட்டவனின் மூச்சு இழுக்கப்பறிக்க ஓடிக்கொண்டிருந்தது’