தமிழ் இழுத்துப்பிடி யின் அர்த்தம்

இழுத்துப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

 • 1

  (செலவு செய்வதில்) கட்டுப்பாட்டுடன் இருத்தல்.

  ‘ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் இழுத்துப்பிடித்தால் சிறிது சேமிக்கலாம்’
  ‘மாதக் கடைசி என்றால் இழுத்துப்பிடிக்க வேண்டியிருக்கிறது’

 • 2

  (ஒருவரை) கட்டுப்படுத்திவைத்தல்.

  ‘எப்போது தறிகெட்டுப்போக ஆரம்பித்தானோ, அப்போதே இழுத்துப்பிடித்திருக்க வேண்டும். இப்போது வருந்தி என்ன செய்வது?’
  ‘உன் பையனைக் கொஞ்சம் இழுத்துப்பிடி. இல்லாவிட்டால் உருப்பட மாட்டான்’